மன ஓட்டம்!

Sunday, October 28, 2007

ஆட்டோ !

அவசரம்! யாருக்குத் தான் இல்லை?
எதில் என்பதில் தான் வியாக்கியானம்.
விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர் என்றெல்லாம் சொன்னால்?

தப்பிக்கப் பார்க்கிறீர்?

சில்லறை இல்லை? எரிச்சலுடன் அந்த ஆட்டோ டிரைவர்!
கூடுதலாகக் கொடுத்த பணத்திற்கு அவர் மீதி தராமல் சரெலென்று பறந்தார். பற் பல பயணங்களில் பணம் வேண்டும்!
யாருக்குத் தான் வேண்டாம்?
அதனால் தானே மீதியை எதிர்பார்த்தது! அவர் பறந்து விட்டால்?
டயர் பஞ்சர் ஆகுவதாக!
நாவில் மட்டும் வருவது பெரும்பாலும் பள்ளிவாசலில்!

தம்பி!
உங்களுக்கு இனி கண் தெரியாது!
அகக் கண்ணை சொல்லியிருந்தால் பரவாயில்லையே;
ரயிலில் சேட்டை வாலிபர் தலைவனின் கேலியின் தீவிரம் தாங்காத அந்த முதியவரின் வார்த்தைகள் அவனின் புறக் கண்களையன்றோ தாக்கி விட்டன! இனி பார்வையே இராதா?

அடடா!
ஸ்ட்ரேய்ன்ஜஸ்ட் கோ இன்ஸிடன்ட்?
கற்பனையா? அப்பாடா!
என்றாலும் அமானுஷ்ய ஆற்றலில் எனக்கு ஆவல்!
ஆம்! எனக்கு இன்னொரு பெயர் உண்டு ..... பாஷா !

உடனடி ரிசல்ட் தெரிந்தாக வேண்டும்!
கிரிக்கெட்டோ, லாட்டரியோ எதுவும் வந்தாக வேண்டும்!

கவனியுங்கள் அகக் கண் பார்வை புறக் கண்பார்வைக்கு மட்டம் என்னும் என் கருத்து ஏன் வருகிறது ? இவ்வுலகை மிக ஆழ்ந்து நேசிக்கின்றேன்? ஹராமோ ஹலாலோ பலா பலன்களை உடனழயாகக் கண்டிட வேண்டுமே! அவனவன் தப்பு செய்கிறான்! மிகப் பரவலாக நன்றாகத் தானே வாழ்கிறார்கள்? அச்சுறுத்தி எச்சரிக்கை செய்யப் பட்ட தண்டனை எங்கே?

அருள் கூர்வீர்! கண்டவர் விண்டிலர் செய்யுள் பாடாதீர்!
என் நம்பிக்கையில் அவசரம் தோய்ந்திருக்கிறது? அல்லது அவசரத்தில் நம்பிக்கை தோய்ந்திருக்கிறது? அவ நம்பிக்கை?

இறை சோதனை என்பது யாது?
காலத்தை நிறுத்தியே விடுவது போலும் ?
எப்போது காலம் நிற்கிறது? பேரம் பேசி இழுத்தடிக்கிறது?
வேதனைகளின் போது மட்டுமா? என் மன விருப்பத்திற்கு மாற்றமாக எது ஒன்று நடந்தாலும் தான்!

யா இறைவா! வாழ்க்கை ஓட்டப் பந்தய சோதனைக் களம்; முடிவு கவனிக்கப் படுகிறது. இன்னும் நம்புங்கள், நம்புங்கள் என்றே கூறி இழுத்தடித்து அதன் பலன் கண்டவர் விண்டிலர் என்ற நியதியையும் ஏற்படுத்தி விட்டால் என் போன்றோர்க்கு எவ்விதம் நம்பிக்கை உண்டாகுமாம்?

கடன் கூறாதீர்! தேவை ரொக்கம்!

காலம் ஜவ்வாகி விட்ட வேளைகளில் இவ்விதமாகவே எப்போதும் என் புலம்பல்!

அதோ! கசங்கிய உலோகக் குப்பை தான் என்ன அங்கே?

ஆட்டோ !

Saturday, October 27, 2007

எங்கோ! ...யாருக்கோ!

இன்ன பிரதமர், ஜனாதிபதி, பெரிய அதிகாரி இன்ன இடத்திற்குச் செல்கிறார்...இன்ன இன்ன பதார்த்தங்கள், இன்ன இடத்தில் உணவு, இன்ன இடத்தில் ஓய்வு..இப்படியாக பயண ஏற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன.

அது போலவே மிக மிகப் பெரும்பாலான நிகழ்வுகள்.. கச்சிதமாக.ஏதோ ஒன்றிரண்டு, எப்போதாவது தவறுகிறது..கால நிலை, இயந்திரக் கோளாறுகளால் பயணம் தாமதம்.. என்ற வகையில்.. எப்போதாவது திட்டப்படி நடைபெறுவதில்லை.

மனிதனின் திட்டம் தானே நிறைவேறுகிறது! இவ்வாறு இருக்கையில் இறைவன் கரம் எங்கே?அப்படியே இருந்தால்..அது கால நிலை அல்லது இதர கோளாறுகளுக்கு மட்டுமேவா?

மனித திட்டத்திற்கு மாற்றமாக நடைபெற்று மனிதன் ஏமாறுவது தான் இறை செயலா? இப்படித்தான் நான் செல்லும் பெரும்பாலான சபைகள் கூறுகின்றன. அதில் பாதிக்கப் பட்ட என் மனம் - பெரும்பாலான சமயங்களில் திட்டம் துல்லியமாக நிறைவேறுகிறதே! மனிதன் கெட்டிக்காரனன்றோ? என்று ஓங்கி, உரக்கக் கூவுகிறது.

திட்டப்படி காரியங்கள் நிறைவேறுவது என்பது இறை நாட்டத்திற்கு இசைவாக மனித திட்டம் அமைந்த நிலை ?

பொதுவாக பெரும்பாலோருக்கு எங்கோ, யாருக்கோ, ஏதோ நடைபெறுவதைக் கேள்வியுறும் போது தத்துவார்த்தமாக சிலவற்றை எடுத்துக் கொள்ள முடிகிறது. இதன் பிண்ணணியில்...

சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய அணு விசை நீர்முழ்கி ஒன்று விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் விண்வெளி ஓடம் விபத்தைச் சந்தித்தது.

"பாருங்கள! இறை ஆற்றலை!" என்று பரவலாகப் பேசப் படும் சபைகளைப் பற்றி.... இவ்வாறு பேசும் போது வார்த்தைகள், தொனி மற்றும் அதன் விளைவுகளில் ஒரு கவனம்.

முதலாவதாக இவ்வாறு பேசும் போது விஞ்ஞான வளர்ச்சியில் நாம் சொல்லிக் கொள்ள முடிகிற மாதிரி தற்போது எதையும் சாதிக்கவில்லை என்ற ஒரு அழுத்தம், வெற்றியாளர்கள் என்று உலகம் கொண்டாடுபவர்களின் பிரபலமாகப் பேசப் படக் கூடிய ஒரு தோல்வியை விளம்பரம் செய்வதாக இருக்கிறது.

ஏராளமான ஆழ் கடல், விண்வெளி பிரயாணங்களில் வெற்றிகரமாக மிதப்பது மனித முயற்சி தான்; விபத்துக்கள் மட்டுமே இறைவனால் நிகழ்த்தப் படுகிறது. அவன் ஆகாயத்தில் ஓரிடத்தில் இருந்து கொண்டு சாதனைகளை நிகழ்த்தும் போது அதில் வெறுமனே இருந்து விட்டு விபத்து என்ற ஒரு நிகழ்வுக்கு மட்டும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறான் என்கிற மறைமுகமான செய்தியைச் சொல்வது போல் அமைந்து விடுகிறது.

ஒரு சமயம், சொல்வதைக் காது கொடுத்து கேள்-அவன் உயிர் தருகிறான், உயிர் எடுக்கிறான் என்ற போது நான் உயிர் கொடுப்பேன்; உயிர் எடுப்பேன் என்ற ஒரு மறுமொழி வந்தது. நியதி மாறாமல் இயங்கும் பிரம்மாண்டமான நிகழ்வு ஒன்றைச் சுட்டிக் காட்டி அதை நீ முடிந்தால் செய்து பாரேன் என்ற அறைகூவல் வந்ததைப் பார்க்கிறோம்.

திட்டம் பிசகாமல் நீந்தி வந்து கொண்டிருக்கிற விஞ்ஞான சாதனை மனிதனுடையது, இதைப் பிசகச் செய்வது அவன் என்றில்லாமல் நியதி மாறாமல் இயக்கங்களனைத்தையும் செய்து கொண்டிருப்பவன் அவனே என்ற அழுத்தமான நம்பிக்கையின்றி இவ் விபத்துகள் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருந்தால் அதிலுள்ள தொனி, பாதிக்கப் பட்டவர்களுக்கு "இஸ்லாமிய இறைவன்" என்பவன் அவ்வப்போது கொடூர விபத்துகளை மட்டும் நிகழ்த்துபவன் போல என்ற செய்தியை சொல்லாமல் சொல்கிறதாக அமையும்.

தற்போது, (2005) ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட மற்றொரு ரஷ்ய நீர்முழ்கி வெற்றிகரமாக மேலெழுப்பி கொண்டு வர பட்டு விட்டது. கழன்ற, பேரதிக வெப்பம் தாங்கும் ஓடுகளை விண்வெளியிலேயே மாற்றி ஒட்டிக் கொண்டு ஓடம் பத்திரமாக திரும்பி வந்து விட்டது.

மனித திட்டம் மற்றும் வழமையான நிகழ்வுகளுக்கு மாற்றமாக காரியங்கள் நடப்பது மட்டும் இறை செயல் என்றில்லாமல் காரியங்கள் நிகழ்வதே அவன் செயல் என்பதே சரியான ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் அது என்னில் எப்போது வந்து பிறகு வலுவடையும்?

Tuesday, October 16, 2007

தொப்பி! அது தான் முக்கியம்.

ஒரு புத்தகத்தில் இதைப் பார்த்தேன்.

'ஒரு பரிசோதனையில் முன் பின் அறிமுகமில்லாத இரண்டு ஆட்கள் பங்கேற்பார்கள். அதில் ஒருவரிடம் நு}று டாலர் தரப்படும். அவர் மற்றவருடன் அந்தக் காசை எப்படியும் பங்கு போட்டுக் கொள்ளலாம். அவர் கொடுக்கும் பங்கை இரண்டாமவர் ஏற்றுக் கொண்டால் இரண்டு பேருமே அந்தப் பணத்தை வைத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த வாய்ப்பு ஒரு முறையே. மற்றவர் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இருவருக்குமே பணம் கிடையாது.

இந்தப் பரிசோதனையில் அநேகம் பேர் சரிபாதியாக 50 டாலர் 50 டாலர் என்று பங்கு போட்டுக் கொள்வார்கள். இன்னும் சிலர் 60, 40 என்று பிரித்துக் கொள்வதுமுண்டு. ஆனால் 70, 30 என்று பிரிக்கும் போது அநேகமாக இரண்டாவது ஆள் தன் பங்கை ஏற்றுக் கொள்ள மாட்டார். அப்போது இருவருக்குமே பணம் கிடைக்காமல் போய்விடும்.

இதில் ஒரு கேள்வி இருந்தது. விஞ்ஞானிகள் இரண்டாவது ஆளைக் கேட்டார்கள். ' உமக்கு கிடைப்பது 30 டாலர்; அதுவும் இலவசம். அதை ஏன் நிராகரித்தீர்?' அதற்கு அவர் சொல்லும் பதில் ஒரே மாதிரி இருக்கும்.

'அது எப்படி, அவர் 70 டாலரை தனக்கு வைத்துக் கொள்ளலாம்? '
'ஆனால் சும்மா வந்த 30 டாலரை இழந்து விட்டீரே! '
'அது பரவாயில்லை. அவருக்கு 70 டாலர் கிடைக்கக் கூடாது. '

அந்த விஞ்ஞானிகள் மனித உள்ளத்தின் ஆழமான ஒரு நுட்பத்தைத் தொட்டு விட்டார்கள். ஆதி காலத்தில் இருந்தே மனிதனுக்கு சமத்துவத்தில் நாட்டமிருக்கிறது. தன் பங்கு அவனுக்குப் பெரிதில்லை. அடுத்தவனுக்கு அநியாயமாக அதிகம் கிடைக்கக் கூடாது. அது தான் முக்கியம்."
------------
ஆமாம்! ஆமாம்! அது தான் முக்கியம்!
பிறகு கேள்வி பதிலாக மனம் பேசியது.
இன்னின்னானுக்கு அது எனக்கு ஏன் இது?

எதைக் கொண்டு வந்தாய்? அவன் கப10ர், ரஹீம் அதே சமயம் ஜப்பார், கஹ்ஹார். எல்லாம் அவனுடையது! நிணைப்பதை நடத்துவான்! அவனைக் கேள்வி கேட்க முடியாது!

சரி! ஏவலை ஏற்கிறேன், விலக்கலைத் தள்ளுகிறேன். இன்னான் இப்படி இல்லை ஆயினும் அவனுக்கு மட்டும் ஏன் அது? அநியாயம்!

வாழ்க்கை ஒரு சோதனை; அவன் கருணையுள்ள சர்வதிகாரி என்ற அடிப்படையை மனதில் நிர்ணயம் கொள்ளாமல்... தொப்பி!

Monday, October 15, 2007

ஸலாமில் நான் பகுத்தது!

மகத்தான ஒரு இரவில் நான் மதிக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற துஆவைப் பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் கீழே வரும் மிரட்டும் ஸலாம்..

ஆணம்.

ஆணத்தில் என்னவெல்லாம் இருக்கிறது?... அது சரி உன் சட்டைக் காலர் ஏன் இப்படி இருக்கிறது?

இவ்வாறாக தர்க்க சாஸ்திரி ஒருவர் என்னிடம் கேட்டார். இவருக்கெல்லாம் பதில் சொல்வானேன் என்பது ஒரு போங்கு. ஆனால் என்ன செய்ய? ரௌத்திரம் பழகவில்லை. இப்போதைக்கெல்லாம் இது தானே ஃபாஷன். பாருங்கள் அறிவு ஜீவிகளும் இப்படித்தான் அணிகிறார்கள் என்றேன். சமீபத்தில் மேல் காதுக்கு இருந்த கிருதா இப்போது கீழ் காது மடல் வரை இருக்கிறதே இதற்கும் இதே பதில் தானோ? நல்ல வேளையாக இந்தக் கேள்வி அவரிடமிருந்து எழவில்லை. பெருங் கூட்டமாய் கூடி எந்த ஒரு செயலையும் செய்தால் எல்லோரும் செய்கிறார்கள் என்று.. எதையும்.. நீ செய்வாய் தானே என்ற என் உண்மை நிலையைக் கேட்டு விடுகிற தோரணை அவரில் தெரிந்தது. இப்படி செய்கிறவர்களின் மனங்களை மந்தை மனம் என்று பெயரிடுவோமே என்றார். சரி! பரிதாபமாக தலை ஆட்டினேன். மந்தையிலிருந்து விலகி அநியாயமாக பலியாகிக் கொண்டிருக்கிறோமே என்ற சுய இரக்கத்தை முகத்தாட்சண்யம் முறுவலிப்பாக்கியது. அகம் ஒன்று முகம் ஒன்று என்பது முனாபிக்(நயவஞ்சக?)தனம். சைபர் முதல் நூறு வரையிலான அலகு உள்ள ஒரு அளவு கோல் இருந்தால் என் இந்த அக முக வேறுபாடு அநேகமாக எண்பதைத் தாண்டியிருக்கும். டிஸ்டிங்ஷன். பலே!
விட்டாரில்லை! மந்தை சுபாவம் கூடாது@ மனித மாண்பே இந்த மகத்தான இடைவெளியில் தான் nருக்கிறது. அதாவது ஸ்டிமுலஸ் மற்றும் ரெஸ்பான்ஸ் ஆகிய விஷயங்களுக்குள் இருக்கும் இடைவெளி! தேர்ந்தெடு! இயங்கு தசை, இயக்கு தசைகளின் இயக்கத்துடனே ஒரே தளத்தில் அணிச்சை செயலும் நம்மில் இயங்குகிறது. அவனவன் செய்கிறான் என்று அணிச்சை செயலாகவே எதையும் நீ செய்து கொண்டேயிருந்தால் எப்படி? அதற்கு இதற்கு நான் பொறுப்பு எனக் கூறு! நில்! பகுத்துப் பார்! சட்டைக் கலரோ, காலரோ நீ தான் தேர்ந்தெடுக்கிறாய்@ அனாவசியமாக அறிவு ஜீவிகளை இழுக்காதே! ஆனால் கரிய மச்சம், சிவந்த மேனி நீ தேர்ந்தெடுப்பதில்லை...யோசி!

இன்று ஸ{புஹ{ தொழுகை தொழுது விட்டோம் தானே என்று எண்ணியவாறு விடை பெற்று நடந்ததில் மனிதன் மலக்குமல்ல விலங்குமல்ல இஹ்த்தியார் என்னும் சுய விருப்பம் கொடுக்கப் பட்டே படைக்கப் பட்டிருக்கிறான் ஆகவே அதைப் பயன்படுத்த வேண்டும்! ஆயினும் அப்போதும் 'கூனூ ம அஸ்ஸாதீகீன்" என்ற ஆயத்து படி அமல் செய்ய வேண்டி இருக்கிறதே. அவரின் தர்க்க பாஷை எதைத் தான் கூறுகிறது? எதற்காகவாவது எப்போதாவது செய்யும் யோசனை சற்று நேரத்திற்கெல்லாம் நீடித்தது.
நல்லது! அணிச்சை செயல் கூடாது, இனி இஹ்த்தியாரைப் பிரயோகித்து பார்ப்பது என்று நாடினேன். ஆனால், சதா கப10ராயும், ரஹீமாயும் இருக்கவே இருக்கிறான் என்று கூறி சாதா மனங்களை என் பாவக் கடல் நுரை தான் பெரிதோ என எண்ணத் துணிய விட்டு விடாதீர் கவனம். ஆகவே, அவன் ஜப்பார், கஹ்ஹார் என்று சபையறிந்து சமயோசிதமாகச் சொல்லுங்கள் என்று ஆலோசனையாகக் கூறப்பட்டிருப்பதை ஆணையாகவே அமல் செய்வோர் சிலர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அன்னார்ந்து பார்-அனகோண்டா! சும்மாவா விட்டான் சுனாமி, நும் இம்மை இருளடர்ந்த காட்டு வழி புதை மணல் குழி ஆகவே கொடு! கொடு! அல்லது துரத்தும் வறுமை உன் அநந்தரம் என்று ஒரு தலை பட்சமாகவே முழங்கி வருவதால் இஹ்த்தியாரைப் பிரயோகிக்க பயந்தேன். பாருங்கள் இதனால் வாழ்த்தும் ஒரு துஆவைக் கேட்டு கூட எனக்கு பயம். அஸ்ஸலாமு அலைக்கும்! எங்கிருந்து இது? முஸாபிர்களின் போலி ஈனஸ்வர நொந்த குரல் இது என்று தெரிந்தும் இதுவும் மேற்சொன்ன பயானும் இரண்டறக் கலந்து என்னை எப்போதும் பிளாக் மெயில் பண்ணும். சடுதியில் சில்லறை வீசி ஆசாமியை அகற்ற வேண்டும்@ நிற்க வைத்தால் அனகோண்டா வந்து விடும் என்ற அணிச்சையில், இஹ்த்;தியாரில் சுரக்க வேண்டிய - வறியவன், பாவம்! நொந்த குரலெழுப்பினால் கூடுதலாகக் கிடைக்கும் என்று எண்ணுகிறான். ஆயினும் அவனுக்கு உதவ வேண்டியது கடமை என்ற அன்பு எப்போதும் ஊறியதே கிடையாது.

இதே ரீதியில் பயந்து போய் அணிச்சை செயலை செய்த என் சகோதரர் தன் விஷயத்தில் மன்னிப்புக் கடலாகவும் பிறர் விஷயத்தில் கடுகைத் துளைப்பவரும் ருசி வேந்தருமான நண்பர் ஒருவருடன் கூட சென்ற போது..
வேந்தர் வழக்கம் போல் தேவைக்கும் அதிகமாக ஆர்டர் செய்து விட்டு அதிலிருந்த சத்தான அயிட்டங்களை அபேஸ் செய்து விட்டு ஆணத்தை வேஸ்ட் செய்யாதே, இஸராஃப் ! ஒரு போதும் கூடாதென்க பயந்து போய்... என்ன செய்ய? பயம்! வேண்டாம் எனக்கு டீ என்று வெயிட்டரிடம் கூறி
விட்டார்.

பில் கொடுத்து சற்று நேரத்திற்கெல்லாம் ஆளைக் காணோம். தொடர்ந்து கொல்லை பூட்டியே இருந்தது.

என் பரிபாஷை:
ஸ்டிமுலஸ் - எந்தக் காரியத்தையும் தூண்டச் செய்யக் கூடிய ஒரு துடிப்பு.. ரெஸ்பான்ஸ் - காரியத்தை செய்து முடித்து விடும் நிலை.இவற்றின் மத்தியில் உள்ள இடைவெளி - செய்யலாமா? கூடாதா என்ற சிந்தனை.
நம்பிக்கை: ஸ{புஹ{ தொழுத நாள் நல்ல நாள்.