மன ஓட்டம்!

Friday, September 23, 2005

இம்மை, மறுமை (நற்) பலன் இணைய கமிஷன் மண்டி!

Win / Win போன்ற சொற்கள் கருத்துக்கள் தெரியாத அதே வேளை Live and Let Die போன்ற தலைப்புச் சொற்கள் அமைந்த ஹாலிவுட் திரைப்படங்களை விரட்டி விரட்டி பார்த்து கொண்டிருந்த Vagobond காலத்துக்கும் முன்பாக....
வியாபாரம் மிகுந்த ஊர்களின் கமிஷன் மண்டிகளில் என்ன தான் இவர்கள் செய்கிறார்கள் என்ற எண்ணமிருக்கும். பெரும்பாலான மண்டிகளில் கல்லா-மர மேசை தவிர வேறொன்றும் தென்படாது. என்ன தான் நடக்கிறது? ஆனால், இம் மர மேசைகளின் பின்னால் சுவற்றில் பெரியதாக அழகிய கையெழுத்தின்றி கொட்டை எழுத்தில் "இலாபம்" என்று எழுதியிருக்கும். மாங்கொட்டை கொண்டு எழுதியிருப்பார்களோ? மாங்கொட்டை கொண்டு வெள்ளையடித்த சுண்ணாம்புச் சுவரில் எழுதி விட்டால் சுரண்டி எடுத்தாலன்றி அழியாது என்று கேள்வி பட்டு இதே போன்று கொட்டை எழுத்துக்களில் கோவை, தூய மைக்கேல் பள்ளி வகுப்பறையில் "ரீல்" விட்டுக் கொண்டிருந்த ஒரு உபாத்தியாயரை நான் இந்த அழியா மை கொண்டு நிறுத்தி மாணவர்களைக் காத்தது பிரசித்தம். சரி. இப்படி போய் எழுதியிருக்கிறார்களே இந்த கடைகளில் யார் போய் என்ன வாங்குவார்கள்? இலாபம் என்று பட்டவர்த்தனமாக எழுதினால் நஷடம் தானே வாங்குபவர்களுக்கு? காலம் கடந்தது. கமிஷன் மண்டியின் செயல்பாடுகள் ஏதோ இன்னது என்று விளங்கியது. இணையம் தெரிந்தது. இதில்...ஏராளமாக எழுதுகிறார்களே? இவர்கள் யார்? யார் படிக்கிறார்கள்? உபயோகம்? நானும் எழுதினால்? இணையத்தின் வழி இம்மை மறுமை சம்பாத்தியங்கள் உண்டு பண்ண முடியுமா? இவ்வாறெல்லாம் யோசித்ததில் அடிப்படைகளான கொள்முதல் சரக்கு - உலகுக்கு விடுக்கும் கருத்துக்கள் அல்லது வியாபார தொழில் தந்திரோபாயம் - கணிணி இயக்க நுட்பங்கள் அல்லது கற்பனை வளம், புத்தாக்கம் போன்றனவற்றில் என்ன தான் எவ்வளவுதான் தேறும் என்று பார்த்ததில் "கமிஷன் மண்டி" வைப்பது நல்லதென்று பட்டது.
இம் மண்டியை வலையுலகில் யாஹ=வின் ஜியோஸிட்டியில் அவரின் விளம்பரத்தை எழுதிக் கொள்ள விட்டதில் இலவச இடம் கிடைத்ததில் அமைத்திருக்கிறேன். அலங்காரம் இருக்காது. ஏற்கனவே எல்லாம் சொல்லி விட்டது. மர மேசை கல்லா மட்டுமே. கமிஷனுக்காக சில விஷயங்கள் உள்ளது. எடுத்து நடந்தால் எனக்கு கமிஷன் உண்டு. விலாசம்:: www.geocities.com/mabdul_khadar

Monday, September 12, 2005

இந்த பக்கம் தமிழில் தோன்ற திரு. சுரதா யாழ்வாணண் அவர்களின் பொங்கு தமிழ் மென் பொருள் உபயோகித்திருக்கிறேன். அவருக்கு என் நன்றிகள் உரித்தாகுக!
I.E நன்றாக தமிழில் தோன்றச் செய்கிறது. ஆனால். Fire Fox இதை Jumble ஆக காட்டுகிறது என்றார் சென்னை நண்பர்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை அடிப்டை அம்சங்கள். மன மகிழ்ச்சி அளிக்கும் வீட்டை கட்ட மனை போல இதோ "பிளாக்" வாங்கி போட்டேன். இலவசமாக கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
என்ன கொண்டு வந்தாய்? எது தான் இலவசமில்லை? எப்போதும் எதுவும் இலவசமே - வேதாந்திகள். பணங்காசுகள். பண்டமாற்று காலத்துக்கு முன்பு என்றால் இவர்கள் கூறுவது சரியாக இருக்கலாம். இப்போதுமா?
எனக்கும். ஏனையோருக்கும் பிரயோஜனமாக இம் மனை அமைய வேண்டுமே! ஏனெனில் பெருமானார் (ஸல்) அவர்களின் துஆ ஒன்று இவ்வாறு வருவதாக மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. " ...எனக்குத் தேவையற்ற எந்தக் காரியத்திற்கும் நான் சிரமம் எடுத்துக் கொள்ளாமலிருக்க அருள்புரிவாயாக!" ஆமீன்.