மன ஓட்டம்!

Saturday, July 05, 2008

போர் எதற்கு?

மறைந்த நடிகர் ரகுவரன் நான் படித்த பள்ளியில் படித்தவர். அவரின் மறைவு குறித்து சக மாணவர், எனது மருத்துவ நண்பர் கீழ்க் காணும் வாசகங்களுடன் மின் மடல் அனுப்பினார்.

Dear Khader,
In death I think we stand aside for few seconds
to reflect, then we continue as we do with no changes in our attitude…


அது தொடர்பான பதிலாக இவ்வலைப் பக்கத்தில்..

அன்பா,

மரணச் செய்தி, சம்பந்தபட்டவரிடம் நமக்குள்ள தொடர்பின் அளவிற்கு பாதிக்கிறது. (எனது ஆப்தர் திருவாளர் ஸ்டீஃபன் Stephen R.Covey கோபிப்பார் - ஆகவே, பாதிக்க விடுகிறோம்.) சில வினாடிகள், அபூர்வமாக மாதம், வருடங்கள் வரை அதன் தாக்கம் இருக்கிறது.

சில கணங்கள்.. அப்புறம்?.. மறந்து விடுகிறோம்.. அவரவர் இயல்பு நிலை தொடர்கிறது... அதை ஆழ்ந்து சிந்திக்கிறோமோ என்ன?.. என்கிற ரீதியில் நம் கருத்துக்கள் உடன் படுகின்றன..

ஆரோக்கியமான சமநிலையை எய்த சமமான, முரண்பட்ட இரு நிலைகள் நம்மில் இருந்து கொண்டிருந்து அவற்றின் மோதலை கணத்திற்கு கணம் கவனித்து ஏதாவது ஒரு தரப்பு முற்றிலும் இல்லாதொழிந்து போகாமல் இருந்தால் பெரும் பயன் எய்தலாம் என்பது என் அனுபவ பாடம். தேர்ச்சி பெறுமளவுக்கு பாடம் படித்த நேரத்தில் காலம் பறந்து விட்டு தோற்றம் விருத்தாப்பியத்தைக் காட்டுகிறது. இதன் பிரதான உதாரணம் : அறிவு x உணர்ச்சி. யௌவனப் பருவத்தில் உணர்ச்சி அறிவைப் புற முதுகிட்டு ஓட ஓட விரட்டியது. பாவம்..

'அறுவை" மருத்துவர்களாக இருக்கும் (இல்லை. உன்னை எவ்விதம் நான் இரட்டை பொருளுடன் குறிப்பேன்) நீங்கள் வலியை 'மறக்கடிக்க" செய்யும் வேதிப் பொருட்களை பாவிப்பது போல...மறதி அவசியம்.

இத்துடன் விடுகிறேன்.

மனதின் இரு நிலைகள் நீங்கி ஒரே நிலை நிலைத்தல் என்பது குறித்த என் முந்தைய செய்தி (10-1-2008) வேறு என்பதால் அந்த கருத்துக்கு இம்மடலின் கருத்து முரணல்ல.

உழுவலன்புடன்,
அப்துல் காதர்.