மன ஓட்டம்!

Saturday, October 27, 2007

எங்கோ! ...யாருக்கோ!

இன்ன பிரதமர், ஜனாதிபதி, பெரிய அதிகாரி இன்ன இடத்திற்குச் செல்கிறார்...இன்ன இன்ன பதார்த்தங்கள், இன்ன இடத்தில் உணவு, இன்ன இடத்தில் ஓய்வு..இப்படியாக பயண ஏற்பாடுகள் திட்டமிடப்படுகின்றன.

அது போலவே மிக மிகப் பெரும்பாலான நிகழ்வுகள்.. கச்சிதமாக.ஏதோ ஒன்றிரண்டு, எப்போதாவது தவறுகிறது..கால நிலை, இயந்திரக் கோளாறுகளால் பயணம் தாமதம்.. என்ற வகையில்.. எப்போதாவது திட்டப்படி நடைபெறுவதில்லை.

மனிதனின் திட்டம் தானே நிறைவேறுகிறது! இவ்வாறு இருக்கையில் இறைவன் கரம் எங்கே?அப்படியே இருந்தால்..அது கால நிலை அல்லது இதர கோளாறுகளுக்கு மட்டுமேவா?

மனித திட்டத்திற்கு மாற்றமாக நடைபெற்று மனிதன் ஏமாறுவது தான் இறை செயலா? இப்படித்தான் நான் செல்லும் பெரும்பாலான சபைகள் கூறுகின்றன. அதில் பாதிக்கப் பட்ட என் மனம் - பெரும்பாலான சமயங்களில் திட்டம் துல்லியமாக நிறைவேறுகிறதே! மனிதன் கெட்டிக்காரனன்றோ? என்று ஓங்கி, உரக்கக் கூவுகிறது.

திட்டப்படி காரியங்கள் நிறைவேறுவது என்பது இறை நாட்டத்திற்கு இசைவாக மனித திட்டம் அமைந்த நிலை ?

பொதுவாக பெரும்பாலோருக்கு எங்கோ, யாருக்கோ, ஏதோ நடைபெறுவதைக் கேள்வியுறும் போது தத்துவார்த்தமாக சிலவற்றை எடுத்துக் கொள்ள முடிகிறது. இதன் பிண்ணணியில்...

சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்ய அணு விசை நீர்முழ்கி ஒன்று விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் விண்வெளி ஓடம் விபத்தைச் சந்தித்தது.

"பாருங்கள! இறை ஆற்றலை!" என்று பரவலாகப் பேசப் படும் சபைகளைப் பற்றி.... இவ்வாறு பேசும் போது வார்த்தைகள், தொனி மற்றும் அதன் விளைவுகளில் ஒரு கவனம்.

முதலாவதாக இவ்வாறு பேசும் போது விஞ்ஞான வளர்ச்சியில் நாம் சொல்லிக் கொள்ள முடிகிற மாதிரி தற்போது எதையும் சாதிக்கவில்லை என்ற ஒரு அழுத்தம், வெற்றியாளர்கள் என்று உலகம் கொண்டாடுபவர்களின் பிரபலமாகப் பேசப் படக் கூடிய ஒரு தோல்வியை விளம்பரம் செய்வதாக இருக்கிறது.

ஏராளமான ஆழ் கடல், விண்வெளி பிரயாணங்களில் வெற்றிகரமாக மிதப்பது மனித முயற்சி தான்; விபத்துக்கள் மட்டுமே இறைவனால் நிகழ்த்தப் படுகிறது. அவன் ஆகாயத்தில் ஓரிடத்தில் இருந்து கொண்டு சாதனைகளை நிகழ்த்தும் போது அதில் வெறுமனே இருந்து விட்டு விபத்து என்ற ஒரு நிகழ்வுக்கு மட்டும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறான் என்கிற மறைமுகமான செய்தியைச் சொல்வது போல் அமைந்து விடுகிறது.

ஒரு சமயம், சொல்வதைக் காது கொடுத்து கேள்-அவன் உயிர் தருகிறான், உயிர் எடுக்கிறான் என்ற போது நான் உயிர் கொடுப்பேன்; உயிர் எடுப்பேன் என்ற ஒரு மறுமொழி வந்தது. நியதி மாறாமல் இயங்கும் பிரம்மாண்டமான நிகழ்வு ஒன்றைச் சுட்டிக் காட்டி அதை நீ முடிந்தால் செய்து பாரேன் என்ற அறைகூவல் வந்ததைப் பார்க்கிறோம்.

திட்டம் பிசகாமல் நீந்தி வந்து கொண்டிருக்கிற விஞ்ஞான சாதனை மனிதனுடையது, இதைப் பிசகச் செய்வது அவன் என்றில்லாமல் நியதி மாறாமல் இயக்கங்களனைத்தையும் செய்து கொண்டிருப்பவன் அவனே என்ற அழுத்தமான நம்பிக்கையின்றி இவ் விபத்துகள் பற்றி நாம் விவாதித்துக் கொண்டிருந்தால் அதிலுள்ள தொனி, பாதிக்கப் பட்டவர்களுக்கு "இஸ்லாமிய இறைவன்" என்பவன் அவ்வப்போது கொடூர விபத்துகளை மட்டும் நிகழ்த்துபவன் போல என்ற செய்தியை சொல்லாமல் சொல்கிறதாக அமையும்.

தற்போது, (2005) ஆழ்கடலில் சிக்கிக் கொண்ட மற்றொரு ரஷ்ய நீர்முழ்கி வெற்றிகரமாக மேலெழுப்பி கொண்டு வர பட்டு விட்டது. கழன்ற, பேரதிக வெப்பம் தாங்கும் ஓடுகளை விண்வெளியிலேயே மாற்றி ஒட்டிக் கொண்டு ஓடம் பத்திரமாக திரும்பி வந்து விட்டது.

மனித திட்டம் மற்றும் வழமையான நிகழ்வுகளுக்கு மாற்றமாக காரியங்கள் நடப்பது மட்டும் இறை செயல் என்றில்லாமல் காரியங்கள் நிகழ்வதே அவன் செயல் என்பதே சரியான ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் அது என்னில் எப்போது வந்து பிறகு வலுவடையும்?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home