மன ஓட்டம்!

Monday, October 15, 2007

ஸலாமில் நான் பகுத்தது!

மகத்தான ஒரு இரவில் நான் மதிக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் என்ற துஆவைப் பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் கீழே வரும் மிரட்டும் ஸலாம்..

ஆணம்.

ஆணத்தில் என்னவெல்லாம் இருக்கிறது?... அது சரி உன் சட்டைக் காலர் ஏன் இப்படி இருக்கிறது?

இவ்வாறாக தர்க்க சாஸ்திரி ஒருவர் என்னிடம் கேட்டார். இவருக்கெல்லாம் பதில் சொல்வானேன் என்பது ஒரு போங்கு. ஆனால் என்ன செய்ய? ரௌத்திரம் பழகவில்லை. இப்போதைக்கெல்லாம் இது தானே ஃபாஷன். பாருங்கள் அறிவு ஜீவிகளும் இப்படித்தான் அணிகிறார்கள் என்றேன். சமீபத்தில் மேல் காதுக்கு இருந்த கிருதா இப்போது கீழ் காது மடல் வரை இருக்கிறதே இதற்கும் இதே பதில் தானோ? நல்ல வேளையாக இந்தக் கேள்வி அவரிடமிருந்து எழவில்லை. பெருங் கூட்டமாய் கூடி எந்த ஒரு செயலையும் செய்தால் எல்லோரும் செய்கிறார்கள் என்று.. எதையும்.. நீ செய்வாய் தானே என்ற என் உண்மை நிலையைக் கேட்டு விடுகிற தோரணை அவரில் தெரிந்தது. இப்படி செய்கிறவர்களின் மனங்களை மந்தை மனம் என்று பெயரிடுவோமே என்றார். சரி! பரிதாபமாக தலை ஆட்டினேன். மந்தையிலிருந்து விலகி அநியாயமாக பலியாகிக் கொண்டிருக்கிறோமே என்ற சுய இரக்கத்தை முகத்தாட்சண்யம் முறுவலிப்பாக்கியது. அகம் ஒன்று முகம் ஒன்று என்பது முனாபிக்(நயவஞ்சக?)தனம். சைபர் முதல் நூறு வரையிலான அலகு உள்ள ஒரு அளவு கோல் இருந்தால் என் இந்த அக முக வேறுபாடு அநேகமாக எண்பதைத் தாண்டியிருக்கும். டிஸ்டிங்ஷன். பலே!
விட்டாரில்லை! மந்தை சுபாவம் கூடாது@ மனித மாண்பே இந்த மகத்தான இடைவெளியில் தான் nருக்கிறது. அதாவது ஸ்டிமுலஸ் மற்றும் ரெஸ்பான்ஸ் ஆகிய விஷயங்களுக்குள் இருக்கும் இடைவெளி! தேர்ந்தெடு! இயங்கு தசை, இயக்கு தசைகளின் இயக்கத்துடனே ஒரே தளத்தில் அணிச்சை செயலும் நம்மில் இயங்குகிறது. அவனவன் செய்கிறான் என்று அணிச்சை செயலாகவே எதையும் நீ செய்து கொண்டேயிருந்தால் எப்படி? அதற்கு இதற்கு நான் பொறுப்பு எனக் கூறு! நில்! பகுத்துப் பார்! சட்டைக் கலரோ, காலரோ நீ தான் தேர்ந்தெடுக்கிறாய்@ அனாவசியமாக அறிவு ஜீவிகளை இழுக்காதே! ஆனால் கரிய மச்சம், சிவந்த மேனி நீ தேர்ந்தெடுப்பதில்லை...யோசி!

இன்று ஸ{புஹ{ தொழுகை தொழுது விட்டோம் தானே என்று எண்ணியவாறு விடை பெற்று நடந்ததில் மனிதன் மலக்குமல்ல விலங்குமல்ல இஹ்த்தியார் என்னும் சுய விருப்பம் கொடுக்கப் பட்டே படைக்கப் பட்டிருக்கிறான் ஆகவே அதைப் பயன்படுத்த வேண்டும்! ஆயினும் அப்போதும் 'கூனூ ம அஸ்ஸாதீகீன்" என்ற ஆயத்து படி அமல் செய்ய வேண்டி இருக்கிறதே. அவரின் தர்க்க பாஷை எதைத் தான் கூறுகிறது? எதற்காகவாவது எப்போதாவது செய்யும் யோசனை சற்று நேரத்திற்கெல்லாம் நீடித்தது.
நல்லது! அணிச்சை செயல் கூடாது, இனி இஹ்த்தியாரைப் பிரயோகித்து பார்ப்பது என்று நாடினேன். ஆனால், சதா கப10ராயும், ரஹீமாயும் இருக்கவே இருக்கிறான் என்று கூறி சாதா மனங்களை என் பாவக் கடல் நுரை தான் பெரிதோ என எண்ணத் துணிய விட்டு விடாதீர் கவனம். ஆகவே, அவன் ஜப்பார், கஹ்ஹார் என்று சபையறிந்து சமயோசிதமாகச் சொல்லுங்கள் என்று ஆலோசனையாகக் கூறப்பட்டிருப்பதை ஆணையாகவே அமல் செய்வோர் சிலர், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அன்னார்ந்து பார்-அனகோண்டா! சும்மாவா விட்டான் சுனாமி, நும் இம்மை இருளடர்ந்த காட்டு வழி புதை மணல் குழி ஆகவே கொடு! கொடு! அல்லது துரத்தும் வறுமை உன் அநந்தரம் என்று ஒரு தலை பட்சமாகவே முழங்கி வருவதால் இஹ்த்தியாரைப் பிரயோகிக்க பயந்தேன். பாருங்கள் இதனால் வாழ்த்தும் ஒரு துஆவைக் கேட்டு கூட எனக்கு பயம். அஸ்ஸலாமு அலைக்கும்! எங்கிருந்து இது? முஸாபிர்களின் போலி ஈனஸ்வர நொந்த குரல் இது என்று தெரிந்தும் இதுவும் மேற்சொன்ன பயானும் இரண்டறக் கலந்து என்னை எப்போதும் பிளாக் மெயில் பண்ணும். சடுதியில் சில்லறை வீசி ஆசாமியை அகற்ற வேண்டும்@ நிற்க வைத்தால் அனகோண்டா வந்து விடும் என்ற அணிச்சையில், இஹ்த்;தியாரில் சுரக்க வேண்டிய - வறியவன், பாவம்! நொந்த குரலெழுப்பினால் கூடுதலாகக் கிடைக்கும் என்று எண்ணுகிறான். ஆயினும் அவனுக்கு உதவ வேண்டியது கடமை என்ற அன்பு எப்போதும் ஊறியதே கிடையாது.

இதே ரீதியில் பயந்து போய் அணிச்சை செயலை செய்த என் சகோதரர் தன் விஷயத்தில் மன்னிப்புக் கடலாகவும் பிறர் விஷயத்தில் கடுகைத் துளைப்பவரும் ருசி வேந்தருமான நண்பர் ஒருவருடன் கூட சென்ற போது..
வேந்தர் வழக்கம் போல் தேவைக்கும் அதிகமாக ஆர்டர் செய்து விட்டு அதிலிருந்த சத்தான அயிட்டங்களை அபேஸ் செய்து விட்டு ஆணத்தை வேஸ்ட் செய்யாதே, இஸராஃப் ! ஒரு போதும் கூடாதென்க பயந்து போய்... என்ன செய்ய? பயம்! வேண்டாம் எனக்கு டீ என்று வெயிட்டரிடம் கூறி
விட்டார்.

பில் கொடுத்து சற்று நேரத்திற்கெல்லாம் ஆளைக் காணோம். தொடர்ந்து கொல்லை பூட்டியே இருந்தது.

என் பரிபாஷை:
ஸ்டிமுலஸ் - எந்தக் காரியத்தையும் தூண்டச் செய்யக் கூடிய ஒரு துடிப்பு.. ரெஸ்பான்ஸ் - காரியத்தை செய்து முடித்து விடும் நிலை.இவற்றின் மத்தியில் உள்ள இடைவெளி - செய்யலாமா? கூடாதா என்ற சிந்தனை.
நம்பிக்கை: ஸ{புஹ{ தொழுத நாள் நல்ல நாள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home